பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, தனது தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம் தேமுதிகவை இழுக்க பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சமீபத்தில் தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 14 லோக் சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அதிரடி கிளப்பினார். இதையடுத்து தேமுதிகவுடன் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தாமல் அமைதி காத்து வந்தன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தரப்பில் பாமக மற்றும் தேமுதிகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதக தகவல் வெளியானது.