நெல்லையில் இன்று ரயில் ஓடாதா?
நெல்லை மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் தண்டவாள இணைப்பு பணிகள் கடந்த 20ஆம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது. இதையொட்டி நெல்லையை மையமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு பாசஞ்சர் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இன்றும் நெல்லை-திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் நெல்லை செங்கோட்டை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதை போல் தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் திருச்செந்தூர் வாஞ்சிமணியாச்சி இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நெல்லை திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை-ஈரோடு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் நாளை வரை வாஞ்சி மணியாச்சியிலிருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்கிறது