களமிறங்கும் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள ஜெய்ஷங்கர் இருவரும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சர்களானவர்கள்.
நிர்மலா சீதாராமன் இரு முறையும் மாநிலங்களவை மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்முறை தெலங்கானாவில் இருந்தும், இரண்டாவது முறை கர்நாடகாவில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் மாநிலங்களவை மூலம் மட்டுமே சென்றுள்ள நிர்மலா சீதாராமன் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன.