இயக்குநர் அமீர் திட்டவட்டம்
தற்போது, ஜாபர் சாதிக் தயாரிப்பில் ”இறைவன் மிகப் பெரியவன்” என்ற திரைப்படத்தை இயக்குநர் அமீர் இயக்கி வருகிறார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனது படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக தனது “இறைவன் மிகப் பெரியவன்”திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
சட்டவிரோத செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.