திமுக – கூட்டணி கட்சிகள் இடையே நீடிக்கும் ?
திமுகவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை..
டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீடு குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோவை, மதுரை தொகுதிகளில் களமிறங்க சிபிஎம் விரும்புவதாக தெரிகிறது. இருந்தபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே திமுகவுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் மக்களவைத் தேர்தலில் கைகோர்க்க உள்ளதாகவும், இரு கட்சிகள் இடையே நாளை மறுநாள் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.