கோவைக்கு பதில் மயிலாடுதுறை

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை எடுத்துக் கொள்ள திமுக  வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. கடந்த முறை பின்பற்றியதை போல் இந்த முறையும் செயல்படுத்த திமுக முயற்சிக்கும் நிலையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகள் முட்டி மோதுகின்றனர்.

இம்முறை கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என கூறப்படுகிறது. அவ்வாறு கமல்ஹாசன் இணையும் பட்சத்தில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் ஒன்று கோயம்புத்தூர் தொகுதியாக இருக்கும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இம்முறை கோயம்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடுதுறை தொகுதியை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வேறு தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துமா? என்பது விரைவில் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published.