கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை மெரினா கடற்கரையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில், 2 புள்ளி இரண்டு மூன்று ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கருப்பு நிற மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சமாதியின் மேல் உள்ள மூன்று வளைவுகளில், வியட்நாம் வெள்ளை கற்கள்; தரை முழுதும் ஜெய்ப்பூர் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நினைவிடத்தின் இரண்டு பகுதிகளிலும், நான்கு சுரங்க பாதைகள் உள்ளன. அதற்குள் சென்றால், 20,000 சதுர அடி பரப்பளவில், பூமிக்கடியில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வீடியோ, 21 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இரண்டாவது தியேட்டரில், கருணாநிதி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்து விளக்கப்படும். மூன்றாவது தியேட்டர், திருவாரூர் – சென்னை இடையிலான மன்னை ரயில் போல வடிவமைக்கப்பட்டுஉள்ளது. இந்த ரயிலில், 7டி தொழில்நுட்பத்தில், கருணாநிதி கடந்து வந்த பாதை, அவரது திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன.

நினைவிடத்தை முழுமையாக சுற்றி பார்க்க, ஒன்றரை மணிநேரம் தேவைப்படும். ஒரே நேரத்தில், பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என்பதால், முன்பதிவு செய்து அனுமதிக்கப்படுவர். கட்டணம் கிடையாது.

விளம்பரம்

Leave a Reply

Your email address will not be published.