கடலுக்கு அடியில் தியானம் செய்த பிரதமர் மோடி
2017 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள ஓக் என்ற இடத்தில் இருந்து பெய்ட் தீவை இணைப்பதற்கு கேபிள் பாலம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கடலில் மூழ்கியதாக நம்பப்படும் துவாரகாவில் கடலுக்குள், பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். 2017 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள ஓக் என்ற இடத்தில் இருந்து பெய்ட் தீவை இணைப்பதற்கு கேபிள் பாலம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.979 கோடி செலவில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட, நாட்டின் மிக நீளமான CABLE பாலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சுதர்சன் பாலம் என பெயரிடப்பட்டுள்ள இப்பாலம், 27 மீட்டர் அகலத்திற்கு 4 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் சுவர்களில் பகவத் கீதை வசனங்கள் மற்றும் கிருஷ்ணரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக துவாரகா நகரத்தின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தண்ணீரில் தவம் செய்தார். துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீகமான அனுபவம் என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.