ஒரு ரூபாய் கூட நிவாரணம் தரவில்லை – முதலமைச்சர்
மத்திய பாஜக அரசின் தடைகளைத் தாண்டி தமிழ்நாடு வளர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் உள்ள சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் சார்பில் மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளன.ந்நிலையில், இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றார்.
இதையடுத்து, சில்லாநத்தம் சிப்காட்டில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாம் சான்ச்பாவோ, திமுக எம்.பி., கனிமொழி மற்றும் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.