என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?
கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் மட்டும் 222 கி.மீ பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் 90 கி.மீ., ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ., தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது. இந்த பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என வட மாவட்ட விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கான பணிகளை ஆய்வு செய்த ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தேர்தலுக்குப்பின் மேலும் 2 தடுப்பணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு போயிருக்கும் நிலையில், மேலும் சில தடுப்பணைகளை கட்டும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.