இன்றைய ராசிபலன் – 26 பிப்ரவரி 2024
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சவுகரியங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையும் தானாகவே நடக்கும். அதுவும் சுலபமாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருக்கும். நிதி நிலைமை உயரும். இதனால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று காலை முதலே வேலை சுறுசுறுப்பாக தொடங்கி விடும். பம்பரமாக சுற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்ய இரண்டு கை பத்தாது. அந்த அளவுக்கு வேலை சுமை தலைமையில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வார தொடக்கத்திலேயே கொஞ்சம் சிரமங்கள் வரத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல் வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மனைவியிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கப் போகின்றது. எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இந்த வேலையை நாமதா செய்து முடித்தோமா, என்ற ஆச்சரியம் உங்களுக்கு வரும். அந்த அளவுக்கு திறமையாக செயல்பட போகிறீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சலிப்பான நாளாக இருக்கப் போகின்றது. ஏன்டா இந்த வேலையை செஞ்சோம் அப்படின்னு யோசிக்க போறீங்க. அந்த அளவுக்கு உங்களை சுற்றி இருப்பவர்கள் பிரச்சனையை கொடுப்பார்கள். ஆனால் தலையை கொடுத்தாச்சு, வேறு வழி கிடையாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எதிர்பாராத பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மனதுக்கு பிடித்த நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் இருக்கும். செலவை சமாளிக்க முடியாமல் சில பேர் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கந்துவட்டி பக்கம் போகாதீங்க. செலவை குறைக்கப் பாருங்கள். வேறு வழியே இல்லை எனும் போது கடன் வாங்கினால் போதும். ரொம்பவும் சுய கௌரவம் பார்க்காதீங்க. மனைவியிடம் கூட உதவி கேட்கலாம்