அமைச்சர் வழக்கில் இன்று தீர்ப்பு !
வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார்.