தலைசிறந்த ஒளிப்பதிவாளர்
தென்னிந்திய திரைப்பட உலகின் தலை சிறந்த ஒளிப்பதிவாளரும்,இயக்குனருமான
ஏ.வின்சென்ட் அவர்களின் நினைவு தினம் இன்று…!
எலோய்சியசு வின்சென்ட் தோற்றம்:
14 ஜூன் 1928.மறைவு:25 பெஃப்ரவரி 2015. 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ்,
தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில்
ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின்
கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான
பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985
இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில்
அமைந்தது. 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு
கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.
ஏ. வின்சென்ட் பிறப்பு:ஜூன் 14.1928.
கோழிக்கோட் கேரள மாநிலம்.
இறப்பு:25 பெப்ரவரி 2015 …அகவை 86.
சென்னை.பணி:ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர்.
பிள்ளைகள்:ஜயனன் வின்சென்ட், அஜயன் வின்சென்ட்.ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் இயக்கத்தில் வெளியான துலாபாரம் தேசிய விருது பெற்ற படமாகும்.இவர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,கமலஹாசன் நடித்த நாம் பிறந்த மண் ஓர் தேசிய உணர்வு மிக்க சிறந்த படமாகும். இத்திரைக்கதையே பின்னாளில் சற்று மாற்றம் செய்யப்பட்டு உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் படமாகும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்த உத்தமபுத்திரனில் ஒளிப்பதிவு பணியை ஆங்கிலப் படங்களுக்கு நிகராக கவனித்தவர் வின்சென்ட். வின்சென்ட் உடல் நலக்
குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.
ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்:
அமரதீபம் (1957)
உத்தம புத்திரன் (1958)
கல்யாணப் பரிசு (1959)
விடிவெள்ளி (1960)
தேன் நிலவு (1961)
போலீஸ்காரன் மகள் (1962)
நெஞ்சம் மறப்பதில்லை (1963)
காதலிக்க நேரமில்லை (1964)
எங்க வீட்டுப் பிள்ளை (1965)
அடிமைப்பெண் (1969)
பிரேம் நகர் (தெலுங்கு) (1971)
வசந்த மாளிகை (1972)
கௌரவம் (1973)
அன்னமய்யா (தெலுங்கு) (1997)
இயக்கிய திரைப்படங்கள்:
துலாபாரம் (1969)
நாம் பிறந்த மண் (1977)
ஆக்கம் :எஸ் .கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.