5 ஆண்டில் 13% முதல் 34% வரை அதிகரிப்பு
017-18 இல் சுமார் 13 சதவீதமாக இருந்த நிராகரிப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்கள் 2022-23 இல் கிட்டத்தட்ட 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 3 கோரிக்கைகளில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பணப்பலன்கள் மற்றும் ஓய்வுதியம் வழங்கும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ – EPFO) செயல்பட்டு வருகிறது.
நிறுவனமும் அவரது வருங்கால வைப்பு நிதி கணக்கில் 12 சதவீதம் செலுத்தும். இதில் நிறுவனம் செலுத்தும் 12 சதவீதத்திலிருந்து 8.33 சதவீத தொகை ஊழியரின் ஓய்வூதிய கணக்குக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பெரம்பரா பகுதியைச் சேர்ந்தவர் கே.பி. சிவராமன். பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது பி.எஃப் பணத்தைப் பெறுவதற்காக, கொச்சியில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) அலுவலகத்திற்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்துதுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் மகள் தீப்தி டி, தனது தந்தையின் பி.எஃப் தொகை ஆன்லைன் போர்ட்டலில் செட்டில் செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது என்றும், ஆனால் அந்தத் தொகை தனது பாஸ்புக் அல்லது வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
2022-23 நிதியாண்டில் மொத்த பி.எஃப் தொகையை பெற பெறப்பட்ட மொத்த 73.87 லட்சம் கோரிக்கைகளில், 33.8 சதவீதம் (24.93 லட்சம்) நிராகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 46.66 லட்சம் பேருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. 2.18 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.