தமிழ்நாடு அரசின் நாய் வளர்ப்பு கொள்கை
9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை ஏன்?
தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவு (DRAFT TAMIL NADU DOG BREEDING POLICY) வழியாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம்.
இந்திய சீதோஷண நிலை, விலங்குகள் உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் என்ன?
உலகம் முழுவதும் உள்ள மக்கள் விதவிதமான செல்லப்பிராணிகளை தங்களது வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகின்றனர். அதில் எப்போதும் முதன்மையான இடம் நாய்களுக்கே. ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் தன்மைக்கேற்ப பல்வேறு நாய் இனங்கள் இருக்கின்றன.
இவற்றில்ல் பல நாய் இனங்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய கலவையான சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்ப பொருந்தி போவதில் சிக்கல் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்துள்ளது.