தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கல்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022ம் ஆண்டுக்கான விருதுகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவில், 2022ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, 15 பேருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 பேருக்கும், தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 பேருக்கும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022ம் ஆண்டுக்கான விருதுகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், 2022ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளையும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்; 38 மாவட்டங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை செயலர் சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றோர்:
விருதாளர் / விருது
அமுதன் அடிகள் – ஜி.யு.போப் விருது
முல்லைச்சரம்’ ஆசிரியர் கவிஞர் பொன்னடியான் — சி.பா.ஆதித்தனார் தங்களிதழ் விருது
த.வசந்தாள் – காரைக்கால் அம்மையார் விருது
திருப்பூர் தமிழ்ச்சங்கம் – தமிழ்த்தாய் விருது
அமிர்த கவுரி – கபிலர் விருது
நாறும்பூநாதன் – உ.வே.சா விருது
மா.ராமலிங்கம் – கம்பர் விருது
தி.ராஜகோபாலன் சொல்லின் செல்வர் விருது
பீ.மு.அஜ்மல்கான் – உமறுப்புலவர் விருது
கூ.வ.எழிலரசு – இளங்கோவடிகள் விருது
தி.பவளசங்கரி – அம்மா இலக்கிய விருது
நா.சு.சிதம்பரம் சிங்காரவேலர் விருது
வை.தேசிங்குராஜன் – அயோத்திதாச பண்டிதர் விருது
டாக்டர் சு.நரேந்திரன் – மறைமலையடிகளார் விருது
ப.சரவணன் – அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது