சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினர் லாஷ்ய நந்திதா (37) சாலை விபத்தில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நந்திதா இன்று காலை பாசராவிலிருந்து கட்ச்பவுளிக்கு காரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் நந்திதா இன்று காலை பாசராவிலிருந்து கட்ச்பவுளிக்கு காரில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த கார் சுல்தான்பூர் அருகே சாலை தடுபான் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த நந்திதாவை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்திதா உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்த கட்சி தலைவர்கள், நந்திதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்