கடப்பாவில் நடைபெற உள்ள தேர்தலை திறமையாக எதிர்கொள்வது எப்படி
*போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி
திருமலை : கடப்பாவில் தேர்தலை திறமையாக எதிர்கொள்வது எப்படி என்று போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆந்திராவில் விரைவில் சட்டமன்றம், மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எஸ்பி சித்தார்த் கவுஷல் உத்தரவின்படி அவசர காலத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. ஆய்தப்படை டிஎஸ்பி முரளிதர் தலைமையில் மேற்கொண்டனர்.
இதில் ஆயுதப்படை, சிவில் போலீஸ் மற்றும் தனிப்படை போலீசாருக்கு அணிவகுப்பு மைதானத்தில் சட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் நாட்களில் தேர்தலின்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் திறம்பட சமாளிக்கும் வகையில் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு காவலரும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். பிரச்னைகள் ஏற்படும் போது, கூட்ட நெரிசலை தவிர்க்க, உரிய நேரத்தில் செயல்படுவது குறித்து, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீசாருக்கும் இந்தப் பயிற்சியைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி முரளிதர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.ஐ.க்கள் ஆனந்த், வீரேஷ், சிவராமுடு, டைட்டஸ், ஆர்.எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏ.ஆர்.போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் பங்கேற்றனர்.