இங்கிலாந்துடன் 4வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் 106ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட்டில் 434ரன் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றியை பெற்றது. அதனால் இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதற்கு பதில் 2வது டெஸ்ட்டில் விளையாடிய ஆகாஷ்தீப் அல்லது முகேசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கான வாய்ப்பை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் நேற்று உறுதி செய்துள்ளார். அதே போல் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் வெற்றி அவசியம் என்பதால் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடவே ஆடும் 11பேர் அணியை இங்கிலாந்து நிர்வாகம் நேற்றே அறிவித்து விட்டது.
இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் ஆட்டம் இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட்டில் வெல்வதின் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் இங்கிலாந்து வென்றால் தொடரை சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைக்கும். ஆகையால் இன்றைய ஆட்டம் 2 அணிகளுக்கும் முக்கியமான ஆட்டம். அதற்கேற்ப ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றங்களுடன் களம் காண உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.