திருச்சி சம்பவத்திற்கு பதிலடி தரணும்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிப்ரவரி 28ம் தேதி நடக்கும் இந்த விழாவில், ஸ்டாலின் முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.
விமான நிலைய விவரம்: திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன,
மோடி வருகை: இந்த நிலையில்தான் இந்த விமான நிலையத்தை திறக்க பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தார், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது ‛‛மோடி.. மோடி..” என பாஜகவினர் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி புதிய விமான முனையம் திறப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்