திடீர் விசிட் அடித்த ரயில்வே வாரிய தலைவர்

 ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகளை ரயில்வே வாரிய தலைவரும் முதன்மை நிர்வாக அதிகாரியும ஜெயவர்மா சின்ஹா ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்

மதுரையில் இருந்து புறப்பட்ட முதன்மை நிர்வாக அதிகாரி ஜெயவர்மா மதுரையில் இருந்து ரயில் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு வந்தடைந்தார். வரும் வழியில் மண்டபம் ரயில் நிலையம் வரை ரயில் பாதைகளை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையே கட்டப்பட்டு வரும் நவீன புதிய ரயில் பாலத்தையும் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகளை ரயில்வே வாரிய தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியும் ஜெயவர்மா சின்ஹா ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்ட வழித்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

புதிய பாம்பன் ரயில் பாலத்தை அமைத்து வரும் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத் தேசிய தலைவர் மற்றும் செயல் இயக்குனர் மற்றும் முதன்மை திட்ட அதிகாரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி தங்கு தடையற்ற ரயில் போக்குவரத்திற்கு கடலையும் நிலத்தையும் இணைக்கும் இந்த பகுதியில் அமைக்கப்படும் இந்த புதிய பாலம் பாதுகாப்பாகவும், நீடித்து நிற்கும் வகையிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.