தமிழக அரசியலின் முக்கிய புள்ளியாக வாருவார் விஜய்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழகத்தில் பெரும் அரசியல் புள்ளியாக இருப்பார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் தற்போது 170 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், லியோ படத்திற்கு பின் தனது 68-வது படமாக கோட் படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் விஜய் ‘’தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள நிலையில், விரைவில் கட்சியில் கொள்கை மற்றும் கோட்பாடுங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புகள் குறையும் போது அரசியல் கட்சி தொடங்குவார்கள். ஆனால் விஜய் தான் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறன்றனர்.
இதனிடையே தமிழக அரசியல்ல விஜய் தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக வருவார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து தந்தி டிவியில் அவர் அளித்த பேட்டியில், இயற்கையின் நீதி பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும் என்பது தான். உங்கள் வட்டத்தில் நீங்கள் பெரிய மீனை வரவேற்றால் உங்கள் பலம் குறையும் போது அந்த பெரிய மீனால் விழுங்கப்படுவீர்கள்.
இன்றும் 10 முதல் 15 வருடங்களில் தமிழகத்தில் தி.மு.க – அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் ஒரு கட்சி முக்கிய சக்தியாகவும் மற்றொரு கட்சி, இன்னொரு கட்சி வலுவிழந்த நிலையிலும் இருக்கும். இந்த இரு திராவிட கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு கீழே சென்றுவிடும். இந்த இரண்டு கட்சிகளில் யார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் அவர்கள் பலம் இழந்துவிடுவார்கள்.
இதன் காரணமாக மற்ற கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை இழக்காமல் இருக்க பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பது தான் நல்லது. நடிகர் விஜய் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக வர வாய்ப்பு உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் 80 சதவீதத்திற்கு மேல் இருந்த இந்த வாக்கு சதவீதம் தற்போது 70 சதவீதத்திற்கு கீழே சென்றுவிட்டது. விரைவில் இது 60 சதவீதத்திற்கு கீழே சென்றுவிடும் என்பதால், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிரானவர்கள் 40 சதவீதம் பேர் இருப்பார்கள்.
இந்த நேரத்தில் யார் ஒருவர் வலுவான கூறுகளுடன் மக்களை ஈர்க்கக்கூடிய சக்தியாக வருகிறார்களோ அவர் முக்கிய சக்தியாக வர வாய்ப்பு உள்ளது. இந்த இடத்திற்கு விஜய் வருவார் என்று சொல்ல, அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனாலும் தேரிட்டிங்கலா பார்த்தால் அவர் முக்கிய சக்தியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கு. கடின உழைப்புடன் கொள்கை மட்டும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கினால் அவருக்கு நிச்சயம் இடம் இருக்கிறது.
சிறிய கட்சிகள் பெரும்பாலும் திராவிட கட்சிகளாக தி.மு.க – அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருப்பவர்கள் தான். நீங்கள் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்றால் திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை குறி வைத்து செயல்பட வேண்டும். இதனால் திராவிட கட்சிகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதைத்தான் விஜய் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.