கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காராக இருந்தாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்த கேமராக்கள் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை அப்படியே படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். ரூ. 232 கோடி ரூபாய் செலவில் கேரளாவின் முக்கிய சாலைகள் அனைத்திலும் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
