விஷாலுக்கு தொடரும் உடல்நல பிரச்னை?
விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார்
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்
தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர
உடல்நல பிரச்னை?: அதன்படி விஷாலுக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது முதுகு வலி, கண்ணில் பிரச்னை, ஒற்றை தலைவலி என ஏகப்பட்ட பிரச்னைகள் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் இதன் காரணமாகத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் உடல்நல பிரச்னையை சரி செய்ய சிம்புவிடம் ஐடியா கேட்டிருக்கிறாராம் விஷால். ஏனெனில் சிம்பு தனது உடலில் சில பிரச்னைகளை சந்தித்தபோது கேரளாவில் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி அதன் மூலம் சரி செய்ததாக கூறப்படுகிறது.
எனவே சிம்பு சென்று மருத்துவம் பார்த்த இடத்தில் தானும் பார்க்க முடிவு செய்து; அதை சிம்புவிடம் கூற; அதன் வழிமுறைகள், எத்தனை நாள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது குறித்து பல விஷயங்களை கூறி உதவியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் விஷால் கேரளாவுக்கு சென்று ஒருமாதம் அந்த சிகிச்சையை எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது