மெட்ரோ ரயில் பணிகளுக்கு பிள்ளையார் சுழி!
சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டரை கோரியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் பெருக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
இதனால் காலநிலை மாற்றத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது
2-ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுச்சேரி வரையிலான 3ஆவது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை 16.07 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2028ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.