விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது முறையாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனியின் பிராங்க் பர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டத்தால் இன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது