சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் நாரிமன் மரணம்

புகழ்பெற்ற அரசியல் சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ். நாரிமன் புதன்கிழமை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.அவர் நவம்பர் 1950-ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார், சுப்ரீம் கோர்ட், மும்பை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி எஸ். நாரிமனுக்கு ஜனவரி 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.மேலும் 1961-ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றினார்: ஆரம்பத்தில் பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் 1972 முதல் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திலும் பணியாற்றினார். அவர் மே 1972-ல் பம்பாயிலிருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தபோது இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மூத்த வழக்கறிஞருக்கு ஜனவரி 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.