சிவகார்த்திக்கேயன் படங்களை நெருப்பால் எரித்து போராட்டம்
அமரன் படத்திற்கு எதிராகவும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரித்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் செய்தனர். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 21 படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சிவகார்த்திக்கேயன் பிறந்தநாளன்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. டீசர் வெளியானது. மேல நெருப்பைக் கொளுத்தி விட்டு.. கீழ ஐஸ் தண்ணிய தெளிச்ச மாதிரி இருக்கு.. வேறன்ன கிளைமேட்தான்! வழக்கமான காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திக்கேயன் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவப் படையை பிடித்து அவர்களை கொலை செய்வது போல டீசர் தொடங்குகிறது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 21 படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சிவகார்த்திக்கேயன் பிறந்தநாளன்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. டீசர் வெளியானது
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கூடி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின மக்களை அவதூறாக சித்தரித்துள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கமல்ஹாசன், சிவகார்த்திக்கேயனுக்கு கண்டன முழக்கமிட்டனர்
அமரன் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கமலஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவப் படங்களை கிழித்து காலால் மிதித்து செருப்பால் அடித்து நெருப்பு வைத்து எரித்தனர். உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அமரன் படத்தின் டீசர் வெளியான சில தினங்களில் கும்பகோணத்தில் கமல், சிவகார்த்திக்கேயனுக்கு எதிராக விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.