கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம்

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றுவருகிறார்கள். அதனால்தான், ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். கடந்தவருடம், இலவச பஸ் திட்டம் குறித்து, சென்னை பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தியது..

அப்போது, 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள் என மொத்தம் 3000 பேரிடம், இதுகுறித்து கருத்து கேட்டது. அதில், “89 சதவீத பெண்கள் போக்குவரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இந்த 89 சதவீத பெண்களில், 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.