பத்திரிகையாளர் மீது தாக்குதல்..
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மீது தாக்குதல்.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மர்ம நபர்களால் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் சராமரியாக வெட்டப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை தேவை!
தமிழ்நாடு அரசு ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
சிரஞ்சீவி அனீஸ்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்