சிங்கப்பூரில் முப்பெரும் விழா!
சிங்கப்பூரில், ஆசை மீடியா நெட்வொர்க்,
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இணைந்து, அக்டோபர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த சாதனையாளர்கள் தொழில் அதிபர்கள், சிங்கப்பூர் இசைக் கலைஞர்கள் திரைப்படத் துறையை சார்ந்தவர்கள்பலரும் கலந்து கொண்டார்கள்.
ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனரும், சர்வதேச மூத்த பத்திரிகையாளர்,
திரைப்பட இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமூக சேவகி, திருமதி, லட்சுமி ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது.
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக
மாநிலத் துணைத் தலைவர் மதன்
மாநில மகளிர் அணி தலைவி ஜமுனா
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில பொதுச் செயலாளர் டாக்டர் லயன் வெங்கடேசன் ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன், அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
செய்தி S.சையத் சென்னை.