கண் மருத்துவ முகாம்..
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு வருமுன் காப்போம் திட்டம் ஜோசப் கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் கண் மருத்துவ முகாம் .
மணப்பாறை மதுரை ரோட்டில் உள்ள உதயம் கண் மருத்துவமனையில் கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம். SRM தங்கமாளிகை, வசந்தகலா மன்றம், துதியின் மகிமை அறக்கட்டளை ஆகியோர் இனைந்து கண் மருத்துவ முகாம் கிருஸ்துவ நல்லெண்ண இயக்க செயலாளார் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ஞானதீபம் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக SRM தங்கமாளிகை நிறுவனர் மன்சூர்அலி, வசந்தகலா நிர்வாக இயக்குநர்
அசோக் பாண்டியன், கிருஸ்துவ நல்லெண்ன இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், துதியின் அறக்கட்டளை நிறுவனர் ஞானபிரகாசம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர், கிருஸ்துவ நல்லெண்ண இயக்க ஒன்றிய செயலாளர் இன்னாசியர் நன்றி கூறினார், கண் மருத்துவ முகாமில் பொதுமக்கள் பயன்பெற்றனர்
செய்தியாளர் P.பாலு மணப்பாறை