இலவச கண் சிகிச்சை முகாம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி கிருஸ்துவ நல்லெண்ன இயக்கம் சார்பாக கல்பாளையத்தான்
பட்டியில் வளம் குன்றா வளர்ச்சி அறக்கட்டளை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக மாபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் கிருஸ்துவ நல்லெண்ன இயக்கம் செயலாளர் எஸ்.மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு சார்லஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், Ex ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாகவுண்டர். முசிறி வட்டாச்சியர் பாத்திமா சகாயராஜ், மருத்துவர் ஆல்பர்ட் ரொமாண்டோ, ஞானபிரகாசம் நிறுவனர் துதியின் மகிமை அறக்கட்டளை, திருமதி ரோஸ்லின் சகாயமேரி பொய்கை பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொதுமக்களுக்கு கண்ணில் சீல்வடிதல், சதை வளர்ச்சி, கண்ணீல் நீர்வடிதல், பார்வை மங்கல், நீர் வடிதல், தலைவழி போன்ற பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் பயன்பெற்றனர், நிகழ்வில் கிறஸ்துவ நல்லெண்ன இயக்க ஒன்றிய செயலாளர் தாமஸ் நன்றி கூறினார்.

செய்தி P.பாலு மணப்பாறை

Leave a Reply

Your email address will not be published.