சங்கரதாஸ் சுவாமி ஜனன தினம்

நாடக உலகின் தந்தை எனப்போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் ஜனன தினம் இன்று … !

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
செப்டம்பர் 7, 1867 ,இல் பிறந்தார். நவம்பர் 13, 1922இல் அமரரானார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.தமிழ் நாடகத் தலைமையாசிரியரான சுவாமிகளின் இயற்பெயர்
சங்கரன்.’இவர் செப்டம்பர் 7, 1867
காட்டுநாய்க்கன்பட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். நவம்பர் 13, 1922 இல் தனது அகவை 55 இல் அமரரானார்.
சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை, பேச்சியம்மாள் தம்பதிகள் இவரின் பெற்றோர் ஆவர்.
ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில் சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.சங்கரதாசர்சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீஷ்வரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது எனத் தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதைக் கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.
மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். ‘வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும் பி. எஸ். வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910 ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.
சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.
பால மீன ரஞ்சனி சபையிலிருந்து 1918 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை,கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.அக்காலத்தில் தமிழக நாடக கம்பெனிகள் பல இவரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து,
பூஜையிட்ட பின்பே நாடகங்களை ஆரம்பிக்கும் மரபை ஏற்படுத்தியிருந்தனர்.அம்மரபு இன்று வரை கடைபிடிக்கப்
படுகின்றது.தியாகராஜா பாகவதர்,
பி.யூ.சின்னப்பா,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,எம்ஜியார்
காளி என்.ரத்தினம்,கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் போன்ற கலைஞர்களுக்கு மானசீக நாடககுரு சங்கரதாஸ் சுவாமிகளே..!சிவாஜி கணேசன் நடித்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் நாடக கொட்டகைக்கு “சங்கரதாஸ் சுவாமிகள்”நாடக அரங்கம் என பெயரிட்டிருப்பர்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்பை 1955 ஆம் ஆண்டில் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்னும் பெயரில்
தி. க. சண்முகம்
எழுதிவெளியிட்டுள்ளார்.
நினைவேந்தல்கள்தொகு

சங்கரதாசர் நூற்றாண்டு நிறைவையொட்டி, 1967-ஆம் ஆண்டில் சென்னையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டும் 1968-ஆம் ஆண்டில் மதுரை தமுக்கம் திடலின் வாயில் அவருக்குச் சிலை எழுப்பியும் அவருக்குத் தி. க. சண்முகம் சிறப்புச் சேர்த்தார். மேலும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி ஆண்டுதோறும் சங்கரதாசர் பிறந்தநாளை தி. க. சண்முகம் கொண்டாடி வந்தார்.
மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்குத் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ளபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்
துறைக்குத்
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது.1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே
1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.
சங்கரதாஸ் சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.இயல் இசை நாடக கலைக்கு உயிர் கொடுத்து இன்று வரை நாடக கலையுலகின் தலைமைச் சிற்பி என அகிலமே போற்றி புகழும்
“ஸ்ரீலஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் ஓர் “கலியுக கலைஞர்”

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.