எரிவாயு சிலிண்டர் குறைவு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மத்திய அரசு சற்று குறைந்த நிலையில் தாமாகவே முன்வந்து புதுவை முதல்வர் புதுவை அரசின் பங்கிற்கு 300 ரூபாய் குறைப்பதாக வாய்மொழியாக தெரிவித்துள்ள செய்தி புதுவை மக்களுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது

இதே போன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டிலும்
இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பாட்டாளி மக்கள் பயனடைவார்கள் என்ற வகையில் ஒட்டுமொத்த தமிழகமே அவருடைய அறிவிப்புக்காக தற்பொழுது காத்திருக்கிறது
மாண்புமிகு தமிழக முதல்வர் நிதி ஆதாரங்களை பரிசீலனை செய்து மக்களுடைய இந்த கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

செய்தி
டாக்டர் லயன் வெங்கடேசன்
சமூக ஆர்வலர்
பொதுச் செயலாளர்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published.