பெண்களுக்கான உலக சாதனை நிகழ்ச்சி!
சென்னையில் பெண்களுக்கான உலக சாதனை நிகழ்ச்சி!
சென்னை ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணியளவில்,
மறுமலர்ச்சி பெண்கள் நல அமைப்பு சார்பாக திருமதி, சண்முக ப்ரியா மற்றும் ஷைன் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறக்கட்டளை சார்பாக திருமதி, ஜெயந்தி ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த நிகழ்ச்சியில்,
கலை விழா 2023 மற்றும் பெண்களுக்கான உலக சாதனைக்கான நிகழ்ச்சி என சிறப்பாக நடைபெற்றது. இதில் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் – உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் – ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். என்ற மூன்று உண்மையினை உணர்த்தும்,
சிலப்பதிகாரம் என்ற காப்பியம் ஓவிய கதையாக வடிவமைத்து, மேலும் இதை 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து சித்திர தையல் கலை (ஆரி எம்ப்ராய்டரி ) மூலம் ஓவியம் வரைந்து ஒரு உலக சாதனை நிகழ்வுக்காக முயற்சி செய்து உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கேடயம், சான்றிதழை
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் திருமதி லட்சுமி ஜெயக்குமார், தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில பொது செயலாளர் லயன் டாக்டர் P.வெங்கடேசன், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் கி.ப.பொற்செல்வன், கலைபாரதி ஆர்ட்ஸ் மஹி பாரதி ஆகியோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் சிரஞ்சீவி அனீஸ், வருகை தந்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்
இருதயராஜ், மற்றும்
திருமதி, சண்முக ப்ரியா, திருமதி, ஜெயந்தி ஆகியோர்
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
செய்தி ஹேமா, சென்னை.