ஜென்டில்மேன்2 திரைப்படத்தின் பூஜை!
ஜென்டில்மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கே டி குஞ்சுமோன் வழங்கும் ஜென்டில்மேன் 2. ராஜ முத்தையா மன்றத்தில் இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய திரை உலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் L.வேல்முருகன், கவிப்பேரரசு வைரமுத்து ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, திரைப்பட இயக்குனர் ஆர் வி உதயகுமார், கதிர், நடிகர் சுமன், திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, நாஞ்சில் சம்பத், நடிகை சித்தாரா, மற்றும் திரை உலக பிரபலங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இப்படத்திற்கு கதை திறக்கத்தை எழுதி இயக்குகிறார் கோகுலகிருஷ்ணன். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார் கே டி. குஞ்சுமோன் மகன் எபி குஞ்சுமோன்.
எஸ் சையது