சுதந்திரத்தின் பிறந்தநாள்!
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக சுதந்திர தின விழா சென்னை போரூரில் உள்ள ஜே.வி.பி. மினி ஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு,
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர், சமூக சேவகி,திருமதி லட்சுமி ஜெயக்குமார் அவர்கள்
தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் டாக்டர் லயன் பி.வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தகவல் தொழில்நுட்ப செயலாளர், டைரக்டர் D.,ராஜரத்தினம்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம், கே.மருதாச்சலம், செய்தி தொடர்பாளர் எஸ்.சையத், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், சசிகுமார்,ஹேமலதா, மாநில ஆலோசகர்கள் கே.வீராச்சாமி, குலசேகரன்,
கோவை மாவட்ட தலைவர் எம் பாலசுப்ரமணியம்,
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில மகளிர் அணி தலைவி திருமதி ஜமுனா முனுசாமி, மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி நிர்மலா கண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
தேசியத் தலைவர் திரு சிரஞ்சீவி அனீஸ்
ஓய்வு பெற்ற நீதிபதி திரு,சிவராமன்,
உலகப் புகழ்பெற்ற
பாடகர் திரு,சி.என்.எஸ், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் திரு, தம்பாச்சாரியார், நடிகர் சுரேஷ், தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக செய்தியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் மற்றும் தேசியப் பொதுச் செயலாளர் திருமதி லட்சுமி ஜெயக்குமார் அவர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
செய்தி எம் பாலசுப்பிரமணியம் கோவை.