நேருவின் துணைவியார் நினைவஞ்சலி
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும்,பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவியுமான கமலா நேருவின் நினைவஞ்சலி தினம் இன்றாகும் ஜனன தினம் இன்று …!
கமலா நேரு தோற்றம்:ஒகஸ்ட் 1, 1899.மறைவு:பெஃப்ரவரி 28, 1936.இவர்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான
ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.பிறப்பு:
டெல்லி.இறப்பு;28 பெப்ரவரி 1936 .அகவை 36.
லாசான், சுவிட்சர்லாந்து.
வாழ்க்கைத்துணை:ஜவகர்லால் நேரு.பிள்ளைகள்:இந்திரா காந்தி
கமலா நேரு பழைய டில்லியின் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்லால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌலவியின் வழிகாட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.
இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது.
கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.பெஃப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லொசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில்நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.
ஆக்கம் :எஸ் கணேசன் .ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை