எதார்த்தம் நிறைந்தவர்..

எதார்த்தம் நிறை நகைச்சுவை நடிகர்
குமரிமுத்துவின் நினைவஞ்சலி தினம் இன்று…!

குமரிமுத்து  தோற்றம்:20 திசம்பர் 1940.
மறைவு: 28 பெஃப்ரவரி 2016. இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில்
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.இவரது முலதனம் இவரது மாறுகண்ணும் வெடிச்சிரிப்பும்தான்.இவரின் திறமையை நன்கு பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்களில் பாக்யராஜ் முதலிடம் பெறுகின்றார்.நகைச்சுவை உணர்வையும் தாண்டி இவருக்குள் இலக்கிய தாகமும் அதிகமுண்டு. புரியாத புதிர்,இது நம்ம ஆளு  படங்களில் தனது பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார்.ஓர் கலை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்த குமரிமுத்துவை சந்தித்து உரையாடியதை இப்பதிவில் நினைவு கொள்கின்றேன்.

குமரிமுத்து பிறப்பு:டிசம்பர் 20, 1940 .
காட்டுப்புத்தூர், திருவாந்திரம் திருவிதாங்கூர்
கேரளம். அரசாட்சி, பிரித்தானிய இந்தியா,
(தற்போது கன்னியாகுமரி) மாவட்டம், தமிழ்நாடு.இறப்பு:28 பெஃப்ரவரி 2016 .அகவை 75.சென்னை,
நாடக நடிகர், திரைப்பட நடிகர், அரசியல்வாதி,இலக்கியவாதி என பன்முகம் கொண்டவர் குமரிமுத்து.  வாழ்க்கைத்துணை:புண்ணியவதி
பிள்ளைகள்;ஐசக் மாதவராசன்,செல்வபுஷ்பா
எலிசபெத் மேரி,கவிதா
உறவினர்கள்:நம்பிராஜன் (மூத்த சகோதரர்)
கே. எம். பாலகிருஷ்ணன் (மூத்த சகோதரர்)
இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் காட்டுப்புதூரில்த மிழ் கிறித்துவக் 
குடும்பத்தில் பிறந்தவர்.குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தலைமுறையாக 728 படங்களில் நடித்தார். இவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார். இவர் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.குமரிமுத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். நில குத்தகை மற்றும் கட்டடம் இடிப்பு பிரச்சனை கேள்விக்குட்படுத்திய பிறகு, சங்கத்தை பற்றி எதிர்மறையாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 2016 பெஃப்ரவரி 28 அன்று தனது 75ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

ஆக்கம்: எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.