வாரிசும் – துணிவும்!
ஒருவர் என்ற நிலை மாற வேண்டும்……
இணைந்து செயல்படுவோம் புதிய மாற்றத்தை காண்போம்….
வெற்றி என்பது தனி மனிதனுக்கு அல்ல உங்கள் அனைவருக்கும் தான்….
பலருடைய தூக்கத்தை கலைத்து விட்டார் மலரவன்!
திண்டுக்கல் நகரில்,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் திருவிழா!
தமிழகத்தில்,
எங்கும் எம்ஜிஆர், எதிலும் எம்ஜிஆர் என்ற மாபெரும் ஆற்றல் மிக்க பேர் அலையை உருவாக்கிய முதல் மனிதர் – எம்ஜிஆர் புகழ்காக்கும் மாபெரும் போராளி திண்டுக்கல் மலரவன்! இவரைப் போல் ஒவ்வொருவரும் செயல்பட்டால் அனைவரும் ஒரு மிகப்பெரிய ஆலமரமே..
அனைத்து வெற்றிகளும் உங்களை வந்து அடையும்….
தலைவருடைய வாரிசாக்கத்தான் மலரவன் அவர்களை பார்க்கிறேன்…
தலைவருடைய துணிச்சலையும் மலரவன் அவர்களிடம் பார்க்கிறேன்…
ஆக இந்த திண்டுக்கல் மாவட்டத்தின் வாரிசும் அவர்தான், துணிவும் அவர்தான் இதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று நேற்று நடந்த எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழாவில் புரட்சித் தலைவரின் உண்மை விசுவாசி எம்ஜிஆர் கீதம் புகழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் விசுவாசிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒரு மிகப்பெரிய ஆலமரமாக திகழலாம்….
ஒருவரை சீண்ட சீண்ட அவர் வளர்ச்சி மென்மேலும் உயரும் என்பதை மறந்து விட வேண்டாம்…..
எங்களின் நோக்கம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே…..
அப்பொழுது தான் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்த விழாவின்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உரிமைகளை
அண்ணன் லியாகத் அலிகான் அவர்கள் பேசிய உணர்வுகள் அனைத்தும் துப்பாக்கியில் உள்ள தோட்டாக்கள் போல், இதயத்துக்குள் ஊடுருவி விட்டது.
இவரைப் போன்ற கம்பீரமான பேச்சாற்றல் பீரங்கிகள் இருக்கும் வரை புரட்சித்தலைவரின் புகழ் அலை ஓயாது என்பது ஆழமான உண்மை!
மனிதர்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிப்பதை விட மனசாட்சியிடம் நல்ல பெயர் வாங்க முயலுங்கள்…
உங்கள் மனசாட்சி சொல்லட்டும் நீங்கள் நல்லவரா…? கெட்டவரா…? என்று!
நீங்கள் யாரை பற்றியும் கவலைப்பட தேவையில்லை தலைவர் வழியில் தைரியமாக பயணத்தை மேற்கொண்டு செல்லுங்கள்.. தலைவர் பட்ட கஷ்டங்களில் ஒரு சொட்டு தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…
சில நாளில் அதுவும் தலை குனிந்து நீங்கள் தலை நிமிரும் காலம் விரைவில் வரும்…
ஏனென்றால், நம் கண் மூடி தூங்கினாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் தோன்றுவார்!
நம் கண் திறந்து பார்த்தாலும் நம் விசுவாசிகள் மத்தியில் தோன்றுவார் புரட்சித் தலைவர்!
புரட்சித் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான மாபெரும் வரலாற்று முதல் வெற்றி திண்டுக்கல் நகரம் என்பதே யாரும் மறந்திட முடியாது!
அதேபோல், திண்டுக்கல் மலரவன் நடத்தும் புரட்சித் தலைவருக்கு ஒவ்வொரு விழாவும் மாபெரும் வெற்றி தான்…. ஆக இதுவரை அவர் எத்தனை வெற்றிகள் பெற்றிருக்கிறார் என்பதை உலகம் அறியும்….
புரட்சித்தலைவர் என்ற பெயரை உச்சரிப்பதால் நம் அனைவரும் தலைநிமிர்ந்து வாழ்கிறோம்…
மலரவன் அவர்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்பட்டாலும் காலப்போக்கில் அணைத்து வெற்றியும் அவரை வந்தடையும்…
போட்டிகள் பொறாமைகள் எத்தனை, எத்தனை..? இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் மற்றவர்களிடத்தில் கண்டோம். ஆனால், இன்று நம் புரட்சித் தலைவர் விசுவாசிகள் சிலரிடம் காணப்படுகிறது…
அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பொய்யான வேஷங்கள் கலைந்து விடும்.
புரட்சித்தலைவரின் உண்மையான விசுவாசிகளை தொட நினைத்தால், அவர்கள் காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள் என்பதை அவர்களே உணரக்கூடிய நேரம் காலம் உணர்த்தும்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் அனைத்தையும் பரப்புரை செய்யும் ஒருவரை – தடுப்பவர்கள் யாரும் தலைவரின் விசுவாசிகளாக இருக்க முடியாது!
ஒற்றுமை என்ற ஒருமை மட்டுமே புரட்சித்தலைவர் அவர்களின் ரத்தத்தில் ஊறிய கொள்கை!
அனைவரும் இணைந்து செயல்படுங்கள்.
வெற்றி என்பது தனி மனிதனுக்கு அல்ல உங்கள் அனைவருக்கும் தான்….
தமிழகத்தின் தொடர்ந்து பொற்கால ஆட்சி தந்த
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், இதய தெய்வம் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடன் உங்கள் அனைவரையும் வணங்கி,
திண்டுக்கல்
மலரவன் அவர்கள் போன்ற உண்மையான விசுவாசிகளிடம் நெருங்கி பழகி, உண்மையும், உலகமும், தெரிந்து கொள்ளுங்கள் என்று சிரஞ்சீவி அனீஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து செயல்பட்டு அனைவரும் வெற்றியை பகிர்ந்து கொள்ளுங்கள்…..
அதுதான் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்…..
இல்லையென்றால் வருகின்ற வெற்றிகள் அனைத்தும் ஒருவருக்கே சென்று கொண்டிருக்கும்….
மற்றவர்கள் பொறாமை படக்கூடிய நிலைமை வேண்டாம்….
பெருமை கொள்வோம் இணைந்து செயல்படுவோம்…..