எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம்.
எழுத்தாளர்,சுஜாதாவின் (ரங்கராஜன்)15 ஆம் ஆண்டு
நினைவஞ்சலி தினமாகும் இன்று (27.02.2008____27.02.2023)
சுஜாதா மே 3, 1935 இல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார்.பெப்ரவரி 27, 2008 இல் தனது 72 வது அகவையில் அமரரானார். இவர் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதைகள்,வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரைகள் பதித்தவர்.இவர் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, ‘தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்’ அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு “வாஸ்விக்” விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.இவருடைய,
“இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத் தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம்,
துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
சுஜாதா எழுதிய சில படைப்புகள்:
அப்ஸரா
அனிதா இளம் மனைவி
அனிதாவின் காதல்கள்
ஆ..!
ஆதலினால் காதல் செய்வீர்
ஆயிரத்தில் இருவர்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
எதையும் ஒருமுறை
எப்போதும் பெண்
என்றாவது ஒரு நாள்
ஏறக்குறைய சொர்க்கம்
என் இனிய இயந்திரா
ஒருத்தி நினைக்கையிலே
ஒரு நடுப்பகல் மரணம்
ஓடாதே!
கணேஷ் x வஸந்த்
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
கம்ப்யூட்டர் கிராமம்
கரையெல்லாம் செண்பகப்பூ
கனவுத்தொழிற்சாலை
காசளவில் ஓர் உலகம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காயத்ரி,
கொலையுதிர்காலம்
கொலை அரங்கம்
சில வித்தியாசங்கள்
சில்வியா
செப்டம்பர் பலி
சொர்க்கத்தீவு,
திசைகண்டேன் வான்கண்டேன்
தேவன் வருகை
நிலா நிழல்
நிர்வாண நகரம்
நில் கவனித்து தாக்கு
நில்லுங்கள் ராஜாவே
நைலோன் கயிறு, குமரிப்பதிப்பகம்
பதவிக்காக
பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம்
பாதிராஜ்யம், குமரிப்பதிப்பகம்
பிரிவோம் சந்திப்போம்
ப்ரியா
மறுபடியும் கணேஷ்
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மாயா
மீண்டும் ஜீனோ
மூன்று நிமிஷம் கணேஷ்
மேகத்தைத் துரத்தினவன்
மேற்கே ஒரு குற்றம்
மோனிகா மற்றும் பல.
திரைப்படங்களான இவர் எழுதிய சில நாவல்கள்:
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு)
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
ஆனந்தத் தாண்டவம்
சைத்தான் போன்றன.
சுஜாதா வசனம் எழுதிய படங்கள்:
ரோஜா
இந்தியன்
ஆயுத எழுத்து
அந்தியன்
போய்ஸ்
முதல்வன்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஜூன்ஸ்
உயிரே
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி
எந்திரன்
செல்லமே
திரை நட்சத்திரங்கள் பலரிடம் நல்ல நட்பு கொண்டவர் சுஜாதா. கமலின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். கவிஞர் வாலி இவரின் நெருங்கிய சகா.இயக்குனர் ஷங்கரின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் சுஜாதா. கமலஹாசனின்”விக்ரம் “
படத்திற்கு வித்திட்டவர் இவரே.சிறந்த வசனகர்த்தா என பல பிரபலங்களின் பாராட்டைப் பெற்றவர் சுஜாதா.
இந்திய எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென ஓர் உயர்ந்த தடத்தை பதித்த சுஜாதா ,உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி
பெஃப்ரவரி 27.02.2008 அன்று மறைந்தார்.
இவருக்கு அரங்க பிரசாத்,கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.