ஸ்ரீ காளியம்மன் திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் வ.உ.சி. தெருவில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவில் மக்கள் அணைவரும் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். மற்றும் இத்திருத்தலத்தின் கனிக்காரர் திரு. ஜலபதி அவர்கள் பூ கரகம் எடுத்து வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லியும் மற்றும் இருபத்தைந்து ஆடு அம்மனுக்கு பலியிட்டு பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மற்றும் இந்த காளி அம்மனை மனதார வழிபடுகின்ற பக்தர்களுக்கு திருமண தடை , குழந்தை பாக்கியம். தொழிழில் முன்னேற்றம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நிறைவேறி வருகிறது. இத்திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்த திருந்தலமாக மக்கள் கூறி வருகின்றனர். தமிழ் மலர் செய்தி. மற்றும் ஒளிப்பதிவாளர்.P.சுரேஷ். வாணியம்பாடி