விஷ்வநாத் தனது 92 வது வயதில் நேற்று (02.02.2023) காலமானார்.

தெலுங்கின் ஜனரஞ்சக இயக்குனரும்,தயாரிப்பாளருமான கலாதபஸ்விகே. விஷ்வநாத் தனது 92 வது வயதில் நேற்று (02.02.2023) காலமானார்.கே. விஸ்வநாத் தோற்றம்: 19.02.1930.மறைவு:02.02.2023…அகவை  92.இவர் இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும்,தயாரிப்பாளருமாவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் 50 இற்கும் மேற்பட்ட  படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், ஹந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய முதல் படம் “ஆத்ம கௌரவம்”.முதல் படமே நாறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.அத்துடன் “ஆத்ம கௌரவம்” சிறந்த படமாகவும் தேர்வு  செய்யப்பட்டு விருதும் கிடைக்கப் பெற்றது. இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற திரைப்படங்கள் நூறு நாட்களைக்கடந்து தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஓடி சாதனை படைத்தது.சங்கராபரணம் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ஓர் ஆபூர்வ சாதனையைப் படைத்தது. இப்படம் இலங்கை கொழும்பு நகரில் நூறு நாட்களும்,யாழில் நூற்றி ஐம்பது நாட்களும் ஓடி சாதனை படைத்தது.  புகழ்பெற்ற இயக்குனர் தயாரிப்பாளரான “சங்கராபரணம்” புகழ் கே.விஷ்வநாத் சிரிக்கும்சலங்கை,சங்கராபரணம்,சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து, போன்ற படங்களை இயக்கியதுடன் குருதிப் புனல், முகவரி,உத்தம வில்லன் ,யாரடி நீ மோஹினி ,ராஜபாட்டை போன்ற படங்களில் நடித்துமுள்ளார்.பிறப்பு:காசினாதுணி விஸ்வநாத்19 பெப்ரவரி 1930 ..அகவை 92.பிறப்பிடம்:பெடுபுலிவாரு, ஆந்திர மாநிலம். மனைவி:ஜெயலட்சுமி. பிள்ளைகள்:நாகேந்திர நாத்,ரவீந்திர நாத்,பத்மாவதி.விருதுகள்:தாதாசாகெப் பால்கே விருது (2016)பத்ஸ்ரீதேசிய திரைப்பட விருதுகள்.நந்தி விருது ஏழு முறை.தென்னக ஃபிலிம்பேர் விருதுமதிப்புறு முனைவர் பட்டம்சர்வதேச மரியாதைதிரைப்படங்கள்:சங்கராபரணம்(1979)சலங்கை ஒலி (சாகர சங்கமம்) (1983)சிப்பிக்குள் முத்து (1985)குருதிப்புனல்முகவரிபாசவலை (1995)ராஜபாட்டைசிங்கம் 2யாரடி நீ மோகினிஉத்தம வில்லன் (2015)லிங்கா இந்திய சினிமா வரலாற்றில் விஷ்வநாத்ஓர் “அபூர்வ நாதம்” ஆக்கம் :எஸ. கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை. 

Leave a Reply

Your email address will not be published.