சிலம்பரசனின் பிறந்த தினம் இன்று.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசனின் பிறந்த தினம் இன்று….! சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல்அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சிலம்பரசன் பிறப்பு:பெப்ரவரி 3.1983.நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் கன பன்முகம் கொண்டவர் இவர். சமீபத்தில் இவர் நடித்த செக்கச் சிவந்த வானம்,மாநாடு,வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. விருதுகள்:கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)ஐடிஎஃப்ஏ சிறந்த விருது – வானம் (திரைப்படம்) (2011)சிறந்த நடிகருக்கான எடிசன் விருது – விண்ணைத்தாண்டி வருவாயா (2010)பிக் எஃப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010)இசையருவி தமிழ் இசை விருது – வேர் இஸ் த பார்டி – சிலம்பாட்டம் (2009)இசையருவி தமிழ் இசை விருது – சிறந்த நடனர் – சிலம்பாட்டம் (2009) ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .