மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம்

மணப்பாறை ஜன – 30திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி திண்டுக்கல் மார்க்கமாக மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தம் – காவல்துறையினர் மற்றும் மதிமுகவினரிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதிமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையிலான மதிமுக வினர் ரயில் மறியல் போராட்டம் .இதில் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ரயிலை மறிக்க சென்றபோது ரயில்வே நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்திய கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால் வண்ண கண்ணன், மணப்பாறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி, ரயில்வே DSB பிரபாகரன் போராட்டக் காரர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு ரயில்வே நிலையம் உள்ளே நுழைய முன்றவற்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.பின் மதிமுக வினரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் காவல் துறையினர்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர்மதிமுக வினர்க்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில் நுழைவாயில் நின்று கோஷம் எழுப்பினர்.பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் வந்த 1 பெண் உள்பட 3 பேர் மதிமுக கொடி அசைத்து மணப்பாறைக்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.மணப்பாறை காவல்துறையினர் மதிமுகவை சேர்ந்த 75 பேரை கைது செய்து போலீசில் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சுமார் ஒரு மணிநேரமாக இரயில் நிலையம் அருகே மதிமுகவினர் கோஷமிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பி.பாலு மணப்பாறை செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.