இன்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் புதிதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் இன்று தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் புதிதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது இந்த அலுவலகம் கட்டுமான பணி செய்பவர்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் அமையும். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் அவர்கள் தொழிலாளர்களுக்கு என்னென்ன உதவி தொகைகள் கிடைக்கும் என்பதை செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார் பிறகு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து நன்றி கூறி விடை பெற்றார். செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்