மண்வாசனை திரைப்படப் புகழ் மறைந்த பாண்டியனின் 64 வது ஜனன தினம் இன்று
மண்வாசனை திரைப்படப் புகழ் மறைந்த பாண்டியனின் 64 வது ஜனன தினம் இன்று…!பாண்டியன் தோற்றம்:5 ஜனவரி 1959.மறைவு: 10 ஜனவரி 2008.இவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.பிறப்பிடம்:5 ஜனவரி 1959மதுரை. அகவை 48 இல் மதுரையில் காலமானார்.வாழ்க்கைத்துணை:லதாரகு என்ற ஒரே வாரிசு.பாண்டியன் மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வாழ்க்கை என்ற படத்தில் நடித்தார்.குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்தார்.நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48 வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர். ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .