பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இன்று டெல்லி செல்கிறார் முதல்வர்!
பிரதமர் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை காலமானார். தாயார் இறந்த செய்தி அறிந்த பிரதமர் மோடி உடனடியாக குஜராத் சென்று தனது தாயாருக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.