தொழில் பூங்கா முதல்வர் திறப்பு..
திருச்சி:
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித ஆலை இரண்டாம் அலகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.1,385 கோடி மதிப்பிலான நவீனமயமாக்கப்பட்ட வன்மரக்கூழ் ஆலை மற்றும் முத்தப்புடையான்பட்டியில் முதற்கட்டமாக 1097.36 ஏக்கரில் அமையவுள்ள ‘சிப்காட்’ தொழிற்பூங்கா வளாகத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில்அமைச்சர்கள் கே.என் நேரு,தங்கம் தென்னரசு,மா.சுப்ரமணியன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது, தொழில் முதலிட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குநர் மு.சாய்குமார், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பி.பாலு மணப்பாறை செய்தியாளர்